பிரதான செயலாளரின் செய்தி

மேல் மாகாணம் இலங்கையின் நிர்வாக மாவட்டம் என கருதப்படும் கொழும்பு மாவட்டம் உட்பட கம்பஹா மற்றும் களுத்துறை போன்ற அதிக மக்கள் வசிக்கும் பிரதான மூன்று மாவட்டங்களைக் கொண்ட மாகாணமாகும்.

வணிக கேந்திர நிலையமாக கருதப்படும் கொழும்பு நகரில் பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் காணப்படுகின்றன. ஆதலால் தமது நாளாந்த கடமைகளுக்காக கொழும்பு நகருக்குள் வருகைதரும் மக்கள் தொகை நாளாந்தம் அதிகரித்துள்ளது. மனித வாழ்க்கையானது பரபரப்பு நிறைந்ததாக ஆனதுடன் புதிய தொழிநுட்பத்தை பாவித்து தமது நடவடிக்கைகளை இலகுவாக்கிக் கொள்ள இயலுமான யுகத்தினை நோக்கி மக்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். அதற்கேற்ப தூரப்பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தமது நடவடிக்கைகளுக்குத் தேவையான தகவல்களை நவீன தொழிநுட்பத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முனைகின்றனர்.

அதற்கேற்ப இதனூடாக  மேல் மாகாணத்தினுள்ளும் ஏனைய மாகாணங்களிலும் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் மேல் மாகாண சபையினுள் தங்களது செயற்பாடுகளை மேற்கொள்வதில் சிக்கல்களைத் தவிர்த்து பிரதான செயலாளர் அலுவலகத்திற்குரிய அனைத்து பிரிவுகளதும் இணையத்தளங்கள் மற்றும் மாகாண சபைக்குரிய அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் தாபனங்களது இணையத்தளங்களுக்குள் பிரவேசிக்கலாம். அதனூடாக தேவையான தாபனங்களது தகவல்களைத் தெரிந்துகொள்ள இயலுமாயிருப்பதன் மூலமாக உங்களது நடவடிக்கைகளை இலகுவாக்கவும் தேவைகளைப்பூர்த்தி செய்யவும் இயலும் என்பது எனது நம்பிக்கையாகும்.

மேல் மாகாண சபையில் பல்வேறு கடமைகளை நிறைவேற்றுவதை உங்களுக்கு இலகுவாக்கிக் கொள்வதற்கு இவ்விணையத்தளத்தினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்களிடம் வினயமாக வேண்டிக் கொள்கிறேன்.

திரு.பிரதீப் யசரத்ன,

பிரதான செயலாளர்,

மேல் மாகாணம்.