பிரதான செயலாளரின் செய்தி

மேல் மாகாணம் இலங்கையின் நிர்வாக மாவட்டமாகக் கருதப்படும் கொழும்பு மாவட்டம் உட்பட கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மிகக் கூடுதலாக மக்கள் வாழும் பிரதானமான மூன்று மாவட்டங்களைக் கொண்ட  மாகாணமாகும்.

வாணிப கேந்திர நிலையமாகக் கருதப்படும் கொழும்பு நகரத்தில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல அமைந்துள்ளன.  எனவே தமது நாளாந்த  கடமைகளுக்காக கொழும்பு நகரத்தினை நோக்கி வரும் மக்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிக்கின்றது. மனிதனின் வாழ்க்கை வேலைப்பழு மிக்கதாகியதுடன். நவீன தொழிநுட்பத்தினைப் பயன்படுத்தி தமது நடவடிக்கைகளை இலகுவாக்கிக் கொள்ளும்  யுகத்தினை நோக்கி மக்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு இணங்க தூர இடங்களிலும் அதேபோல் நகரப் பிரதேசங்களிலும் வாழும் மக்களும் தங்களது நடவடிக்கைகளுக்குத் தேவையான தகவல்களை நவீன தொழிநுட்பத்தின் ஊடாகப்பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கின்றனர்.

.

இதற்கிணங்க  இதன் மூலம்  மேல் மாகாணத்திலும்,  அதேபோல் ஏனைய மாகாணங்களிலும் வசிக்கும் எல்லா மக்களுக்கும் மேல்மாகாணத்தினுள் தமது கடமைகளை மேற்கொள்ளும் போது தமது பிரச்சினைகளைத் தவிர்த்து,   பிரதம செயலாளர் காரியாலயத்திற்குரிய எல்லா பிரிவுகளினதும் இணையத்தளத்திற்கு அதேபோல்  மாகாண சபைக்குரிய எல்லா அமைச்சுக்கள் , திணைக்களங்கள், மற்றும் தாபனங்களின் இணையத் தளங்களுக்கு பிரவேசிக்க முடியும். இதன் மூலம் தேவையான திணைக்களங்களின் தகவல்களை பெற்றுக்கொள்ள, இயலுமாகுவதனூடாக உங்களது நடவடிக்கைகளை இலகுவாக்கிக்கொள்ள, மற்றும்  தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.

மேல் மாகாண சபையினுள் பல்வேறுபட்ட கடமைகளை மேற்கொள்ளும் போது  உங்களது நடவடிக்கைகளை இலகுவாக்கிக் கொள்ள இந்த  இணையத்தளத்தை அணுகுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

எஸ்.எல்.தம்மிகா கே.விஜயசிங்க

பிரதம செயலாளர்

மேல் மாகாணம்.