பிரதான செயலாளர் அலுவலகம் தொடர்பாக

மாகாணசபையின் பிரதான அமைப்பாளராவது பிரதான செயலாளர் அலுவலகமாகும். பிரதான நிறைவேற்று உத்தியோகத்தரான பிரதம செயலாளர் நியமிக்கப்படுவது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதியினாலாகும்.

நிர்வாகம், திட்டமிடல் மற்றும் நிதி அலுவல்கள் அவரது பிரதான விடயங்களாக இருப்பதுடன், மாகாண சபைக்கு ஏற்புடையதான வேறெந்தப் பணியும் அவரது மேற்பார்வைக்கு உட்படும். மாகாணசபையின் அனைத்து அரசியல் அலுவல்கள் மற்றும் வழிகாட்டல் ஆலோசனைகள் உருவாக்குதல் மாகாண முதலமைச்சர் பிரதான செயலாளர் அலுவலகத்தின் மூலமாகும்.

நோக்கம் மற்றும் பணிகள்

  • இலங்கையின் அரசியலமைப்பிற்கான 13 வது திருத்தத்தின்படி மாகாணசபைகளுக்கு உரித்தாக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரங்களை அமுல்படுத்துவதற்கான அனைத்து நிர்வாக அலுவல்களையும் மற்றும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுதல்.
  • தேசிய அபிவிருத்திக் கொள்கைக்கு இணையாக உள்ளூராட்சியுடன் தொடர்புடைய வருடாந்த அபிவிருத்தித் திட்டங்களை தயாரித்தல் மற்றும் வினைத்திறனான முறையில் அவற்றை செயற்படுத்தல்.
  • வருடாந்த வரவு செலவுத்திட்டத்தை தயாரித்தல், நிதிவளங்களைக் கையாளும் பொருட்டு நிதிக்கட்டுபாட்டையும் மற்றும் கொள்கைசார் வழிகாட்டல் ஆலோசனைகளையும் வழங்குதல், கணக்கு நடவடிக்கை முறையை அறிமுகப்படுத்தல் மற்றும் மாகாண திறைசேரியொன்றின் கொள்ளளவுடன் நடவடிக்கை மற்றும் பொறுப்புக்களை விஸ்தரித்தல்.
  • மாகாணசபையின் கீழ் கொண்டுவருகின்ற உரிய திணைக்களத்தின் மூலம் பயன்படுத்தப்படும் கணக்கு மற்றும் தாபன நடவடிக்கை முறை கணக்காய்வுக்கு உட்படுதலை உறுதிப்படுத்துதல் உள்ளக கணக்காய்வு உற்பத்தித்திறனாக செயற்படுவதற்கு வழியமைத்தல்.
  • மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் கடமை மற்றும் பணிகளை நிறைவேற்றுவதன் பொருட்டு தேவையான உதவிகளை பெற்றுக்கொடுத்தல்.
    மாகாண சபையில் பணிக்குழு பயிற்சி அளித்தல் தொடர்பாக நிகழ்ச்சித்திட்டம் தயாரித்தல் மற்றும் செயற்படுத்துதல்.